Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் உச்சம் செல்லும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 240 ரூபாய் உயர்வு..!

Advertiesment
Gold

Mahendran

, சனி, 11 ஜனவரி 2025 (11:29 IST)
தங்கம் விலை இந்த வாரத்தில் உயர்ந்து கொண்டே வரும் நிலையில் இன்றும் ஒரு சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. ஆனால் அதே நேரத்தில் வெள்ளி விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
கடந்த  டிசம்பர் 26ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் ₹7,125 என்று இருந்த நிலையில், படிப்படியாக உயர்ந்து நேற்று ₹7,285 வரை விற்பனையானது. ஆனால், இன்று திடீரென ஒரு கிராமுக்கு ₹30  உயர்ந்து 7,315 ஆக விற்பனையாகிறது.
 
அதேபோல், நேற்று ஒரு சவரன் தங்கம் ₹58,280 என்ற விலையில் விற்பனையான நிலையில், இன்று ₹240 குறைந்து ₹558,520 என விற்பனையாகியுள்ளது.
 
அதேபோல், 24 கேரட் தூய தங்கம் ஒரு கிராம் ₹7,980 என்றும், எட்டு கிராம் ₹63,840 என்றும் விற்பனையாகி வருகிறது.
 
நேற்று ஒரு கிராம் வெள்ளி ₹101 என விற்பனையான நிலையில், இன்றும் அதே விலையில் விற்பனையாகிறது. வெள்ளி விலை ஒரு கிலோ ₹101,000 என்றும் விற்பனையாகி வருகிறது.
 
தங்கம் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால், இந்த நேரத்தில் முதலீட்டுக்கு வாங்கி வைத்துக் கொள்வது நல்லது என பொருளாதார ஆலோசகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எக்கமா.. எக்கச்சக்கமா..! பொங்கலையொட்டி விண்ணை தொட்ட விமான டிக்கெட் விலை!