ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

Siva
திங்கள், 6 ஜனவரி 2025 (10:24 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் தங்கம் விலையில் இன்று எந்தவிதமான மாற்றமும் இல்லை என்றும் சனி ஞாயிறு திங்கள் ஆகிய மூன்று நாட்களும் ஒரே விலையில் விற்பனை ஆகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
இந்த ஆண்டு பிறந்தது முதல் அதாவது ஜனவரி ஒன்றாம் தேதி முதல் 3ஆம் தேதி வரை தங்கம் விலை உயர்ந்த நிலையில் திடீரென நான்காம் தேதி தங்கம் விலை இறங்கியது. அன்றைய தினம் 7215 ரூபாய் என ஒரு கிராம் விற்பனையான நிலையில் அதே விலையில் தான் இன்றும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று விலைமாற்றமின்றி ஒரு கிராம் ரூபாய்   7,215 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய்    57,720 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,871 எனவும் ஒரு சவரன் ரூபாய் 62,968 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 99.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  99,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments