Publish Date: Tue, 19 Nov 2024 (17:21 IST)
Updated Date: Tue, 19 Nov 2024 (17:22 IST)
இன்றிரவு 1 மணி வரை கனமழை பெய்யும் மாவட்டங்கள் குறித்து அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது
தமிழகத்தில் மழை குறித்த தகவல்களை அவ்வப்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு வரும் நிலையில் இன்று இரவு 1 மணி வரை மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை இடி மின்னலுடன் பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வங்கக்கடலில் வரும் 23ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறிய நிலையில் அதன் பின்னர் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது