Publish Date: Tue, 19 Nov 2024 (11:20 IST)
Updated Date: Tue, 19 Nov 2024 (11:21 IST)
சென்னையில் இன்று ஒரே நாளில் 500 ரூபாய்க்கு மேல் தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில் இன்னும் உயர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ரூபாய் 7,065 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 560 உயர்ந்து ரூபாய் 56,520 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,570 எனவும் ஒரு சவரன் ரூபாய் 60,560 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 101.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 101,000.00 எனவும் விற்பனையாகி வருகிறத