Publish Date: Mon, 18 Nov 2024 (09:48 IST)
Updated Date: Mon, 18 Nov 2024 (09:49 IST)
தங்கம் விலை கடந்த வாரம் சரிந்து கொண்டே வந்த நிலையில் இந்த வாரத்தின் முதல் நாளே தங்கம் விலை ஒரு சவரனுக்கு 480 அதிக இருப்பதால் அதிகரித்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து ரூபாய் 6,995 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 480 உயர்ந்து ரூபாய் 55,960 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,500 எனவும் ஒரு சவரன் ரூபாய் 60,000 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 99.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 99,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது