Publish Date: Thu, 14 Nov 2024 (10:09 IST)
Updated Date: Thu, 14 Nov 2024 (10:10 IST)
தங்கம் விலை இன்று ஒரே நாளில் 800 ரூபாய்க்கும் அதிகமாக குறைந்துள்ள நிலையில் இன்னும் குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் தங்கத்தின் முதலீடு செய்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் 110 ரூபாய் குறைந்துள்ளதாகவும் ஒரு சவரன் 880 ரூபாய் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ள நிலையில் சென்னை நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து ரூபாய் 6,935 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 880 குறைந்து ரூபாய் 55,480 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,440 எனவும் ஒரு சவரன் ரூபாய் 59,520 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 99.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 99,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது