Publish Date: Thu, 31 Oct 2024 (11:42 IST)
Updated Date: Thu, 31 Oct 2024 (11:43 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தீபாவளி நாளிலும் தங்கம் விலை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
நேற்றைய விலையை விட இன்று ஒரு கிராம் 15 ரூபாயும் ஒரு சவரன் 120 ரூபாயும் உயர்ந்துள்ள நிலையில் ஒரு சவரன் கிட்டத்தட்ட 60 ஆயிரத்தை நெருங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் தகவலை பார்ப்போம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ரூபாய் 7,455 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 120 உயர்ந்து ரூபாய் 59,640 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,960 எனவும் ஒரு சவரன் ரூபாய் 63,680 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 109.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 109,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது