Publish Date: Wed, 23 Oct 2024 (11:12 IST)
Updated Date: Wed, 23 Oct 2024 (11:14 IST)
தங்கம் விலை கடந்து சில நாட்களாக உயர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் இன்றும் தங்கம் விலை ஒரு கிராமுக்கு 40 ரூபாயும் ஒரு சவரனுக்கு 320 ரூபாயும் உயர்ந்துள்ளது. இதனை அடுத்து தங்கம் விலை ரூபாய் 59 ஆயிரத்தை நெருங்கி விட்ட நிலையில் மிக விரைவில் 60,000 என்று இலக்கை அடையும் என்று கூறப்படுவதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆனால் அதே நேரத்தில் தங்கத்தின் முதலீடு செய்தவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ரூபாய் 7,30 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 320 உயர்ந்து ரூபாய் 58,720 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,795 எனவும் ஒரு சவரன் ரூபாய் 62,360 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 112.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 112,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது