Publish Date: Tue, 24 Sep 2024 (09:42 IST)
Updated Date: Tue, 24 Sep 2024 (09:43 IST)
தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் சமீப காலமாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது என்பதும் உலக அளவில் தங்கத்தின் தேவை அதிகரிப்பு போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தங்கம் விலை இன்று ஒரு கிராம் 7 ஆயிரம் ரூபாய் என்றும் ஒரு சவரன் 56 ஆயிரம் ரூபாய் என்றும் விற்பனை ஆகி வருகிறது. வரலாற்றில் முதல்முறையாக ஒரு கிராம் 7000 ரூபாய் என தங்கம் விலை விற்பனையாகி வருவது பொது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ரூபாய் 7000 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 160 உயர்ந்து ரூபாய் 56,000 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,455 எனவும் ஒரு சவரன் ரூபாய் 59,640 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 98.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 98,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது