Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு நாள் முன்னதாகவே கான்பூர் சென்ற இந்திய அணி வீரர்கள்.. கம்பீரின் திட்டம் இதுதான்!

Advertiesment
ஒரு நாள் முன்னதாகவே கான்பூர் சென்ற இந்திய அணி வீரர்கள்.. கம்பீரின் திட்டம் இதுதான்!

vinoth

, செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (07:40 IST)
இந்தியா - வங்காளதேசம் கிரிக்கெட் அணிகள் இடையேயான 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கி நடந்தது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 376 ரன்களை குவித்த நிலையில் வங்கதேச அணி 149 ரன்களில் விக்கெட்டுகளை இழந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 287 ரன்களை குவித்த நிலையில் 515 ரன்கள் இலக்கோடு களமிறங்கிய வங்கதேச அணி 234 ரன்களிலேயே விக்கெட்டுகளை இழந்தது. இதனால் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சென்னை டெஸ்ட் கிட்டத்தட்ட மூன்றரை நாளில் நிறைவடைந்தது. இதனால் இந்திய அணி வீரர்கள் சென்னையில் ஒருநாள் ஓய்வெடுத்து அதன் பின்னர் கான்பூர் செல்வார்கள் என நினைத்த நிலையில் போட்டி முடிந்த அன்றே கம்பீரோடு சில வீரர்கள் கான்பூருக்கு சென்றுவிட்டனர். அங்கு சென்று மைதானத்தின் தன்மையைக் கணித்து அதிகநேரம் பயிற்சிகள் மேற்கொள்ளலாம் என இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனி ரிஷப் பண்ட்டின் கையில்தான் ஆட்டத்தின் அச்சாணி இருக்கும்.. முன்னாள் வீரர் பாராட்டு!