Publish Date: Thu, 12 Sep 2024 (10:13 IST)
Updated Date: Thu, 12 Sep 2024 (10:14 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கம் இன்றி ஒரே விலையில் இருந்த நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை ஏறியதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று ஏறிய வேகத்தில் மீண்டும் இறங்கி உள்ள நிலையில் சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ரூபாய் 6705 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 குறைந்து ரூபாய் 53,640 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,160 எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,280 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 91.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 91,500.00 எனவும் விற்பனையாகி வருகிறது