Publish Date: Wed, 11 Sep 2024 (10:34 IST)
Updated Date: Wed, 11 Sep 2024 (10:51 IST)
சென்னையில் கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கமின்றி ஒரே விலையில் இருந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை சற்று உயர்ந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் 35 ரூபாய் உயர்ந்துள்ளதாகவும் ஒரு சவரன் தங்கம் 280 ரூபாய் உயர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி உரைத்த நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து ரூபாய் 6,715 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 240 உயர்ந்து ரூபாய் 53,720 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,170 எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,360 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 93.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 93,500.00 எனவும் விற்பனையாகி வருகிறது