Publish Date: Tue, 10 Sep 2024 (11:21 IST)
Updated Date: Tue, 10 Sep 2024 (11:22 IST)
தங்கம் விலை கடந்த மூன்று நாட்களாக ஒரே விலையில் இருக்கும் நிலையில் இன்று நான்காவது நாளாகவும் விலையில் மாற்றமில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் வெள்ளியின் விலையில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த தகவல்களை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூபாய் 6680 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 53,440 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,135 எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,080 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 91.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 91,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது