Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தங்கத்தின் விலை இன்று ஏற்றமா? இறக்கமா? சென்னை நிலவரம்..!

Gold

Siva

, வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (09:54 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளன. தங்கத்தின் விலை போல் வெள்ளியின் விலை என்னும் மாற்றமில்லை என்று செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த விவரங்களை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம்  ரூபாய்   6,715 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய்   53,720 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,170 எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,360 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 93.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  93,500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Siva
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடர்ந்து 4 வது நாளாக பங்குச்சந்தை ஏற்றம்.. இன்றைய நிப்டி நிலவரம்..!