Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் மிகப்பெரிய அளவில் சரிந்த தங்கம் விலை.. சவரன் ரூ.52000க்குள்.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

Siva
புதன், 24 ஜூலை 2024 (09:57 IST)
கடந்த சில நாட்களுக்கு முன் தங்கம் விலை ஒரு சவரன் 55 ஆயிரத்திற்கும் மேல் என விற்பனை ஆகிக் கொண்டிருந்த நிலையில் நேற்று பட்ஜெட்டில் தங்கத்திற்கான வரி குறைக்கப்பட்டதை அடுத்து நேற்று ஒரே நாளில் ஒரு சவரனுக்கு ரூ.2000 க்கு மேல் குறைந்தது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை குறைந்து ஒரு சவரன் 52 ஆயிரத்துக்குள் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த தகவல்களை பார்ப்போம்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து ரூபாய்   6,490 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 480 குறைந்து  ரூபாய் 51,920 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.52,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6,945 எனவும் ஒரு சவரன் ரூபாய் 55,560 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 92.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 92,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

சென்னையில் 10 ஆண்டுகளுக்கு பின் ஏப்ரலில் பெய்த மழையின் சாதனை.. முழு தகவல்கள்..!

245 சதவீதம் வரி.. என்ன பண்ணப் போறீங்க? - சீனாவை சீண்டிய அமெரிக்கா!

சைவம், வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு.. அமைச்சர் பொன்முடி மீது பொதுநல வழக்கு..!

முதல்வர் ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு.. கவர்னருக்கு எதிரான வெற்றியை கொண்டாட வந்தேன் - கமல்ஹாசன்!

அடுத்த கட்டுரையில்
Show comments