Publish Date: Wed, 24 Jul 2024 (09:57 IST)
Updated Date: Wed, 24 Jul 2024 (09:59 IST)
கடந்த சில நாட்களுக்கு முன் தங்கம் விலை ஒரு சவரன் 55 ஆயிரத்திற்கும் மேல் என விற்பனை ஆகிக் கொண்டிருந்த நிலையில் நேற்று பட்ஜெட்டில் தங்கத்திற்கான வரி குறைக்கப்பட்டதை அடுத்து நேற்று ஒரே நாளில் ஒரு சவரனுக்கு ரூ.2000 க்கு மேல் குறைந்தது என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை குறைந்து ஒரு சவரன் 52 ஆயிரத்துக்குள் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த தகவல்களை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து ரூபாய் 6,490 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 480 குறைந்து ரூபாய் 51,920 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.52,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6,945 எனவும் ஒரு சவரன் ரூபாய் 55,560 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 92.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 92,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது