Publish Date: Thu, 18 Jul 2024 (11:56 IST)
Updated Date: Thu, 18 Jul 2024 (11:57 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை நேற்று கடுமையாக உயர்ந்த நிலையில் இன்று சற்றே குறைந்துள்ளது. இருப்பினும் ஒரு சவரன் 55 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தான் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ரூபாய் 6,905 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 120 குறைந்து ரூபாய் 55,240 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.56,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,375 எனவும் ஒரு சவரன் ரூபாய் 59,000 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 99.20 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 99,200.00 எனவும் விற்பனையாகி வருகிறது