Publish Date: Sat, 22 Jun 2024 (09:36 IST)
Updated Date: Sat, 22 Jun 2024 (09:37 IST)
தங்கம் விலை நேற்று ஒரு கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் 85 ரூபாய் குறைந்து ஒரு வாரத்திற்கு முந்தைய விலையில் தற்போது விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 85 ரூபாய் குறைந்து ரூபாய் 6,695 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 680 குறைந்து ரூபாய் 53,560 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,165 எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,320 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் 96.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 96,500.00 எனவும் விற்பனையாகி வருகிறது.