Publish Date: Mon, 29 Apr 2024 (10:07 IST)
Updated Date: Mon, 29 Apr 2024 (10:10 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று மீண்டும் குறைந்து மீண்டும் சவரன் 55 ஆயிரத்திற்குள் இருப்பதை அடுத்து பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 6,740 ரூபாய் குறைந்து ரூபாய் 6,740 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 240 குறாஇந்து ரூபாய் 53,920 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.55,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,210 எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,680 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் 87.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 87,500.00 எனவும் விற்பனையாகி வருகிறது