Publish Date: Mon, 22 Apr 2024 (10:26 IST)
Updated Date: Mon, 22 Apr 2024 (10:27 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வரும் நிலையில் சமீபத்தில் 55 தாண்டியது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ரூபாய் 6,845 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 320 குறைந்து ரூபாய் 54,760 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,315 எனவும் ஒரு சவரன் ரூபாய் 58,520 எனவும் விற்பனையாகி வருகிறது.
சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் 89.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 89,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது