Publish Date: Fri, 19 Apr 2024 (21:14 IST)
Updated Date: Fri, 19 Apr 2024 (21:16 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று லக்னோ மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் லக்னோ அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை அணியில் தொடக்க ஆட்டகாரர்கள் ஏமாற்றம் அளிக்க, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஜடேஜா மற்றும் மொயின் அலி சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
சிறப்பாக விளையாடிய ஜடேஜா அரைசதம் அடித்தார். மொயின் அலி 30 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் களமிறங்கிய தோனி அதிரடியாக விளையாடி 9 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 276 ரன்கள் சேர்த்தது.
லக்னோ அணி சார்பில் க்ருனாள் பாண்டியா அதிகபட்சமாக 2 விக்கெட்களை வீழ்த்தினார்.