Publish Date: Thu, 18 Apr 2024 (12:39 IST)
Updated Date: Thu, 18 Apr 2024 (12:41 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்று தங்கம் விலை ஓரளவு வீழ்ச்சி அடைந்துள்ளது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் இன்னும் தங்கம் விலை அதிகமாக உயரும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூபாய் 6,835 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 54,680 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.55,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,305 எனவும் ஒரு சவரன் ரூபாய் 58,440 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் 50 காசுகள் குறைந்து ரூபாய் 90.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 90,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது