Publish Date: Wed, 17 Apr 2024 (15:38 IST)
Updated Date: Wed, 17 Apr 2024 (15:40 IST)
சென்னை மெரினா கடற்கரை யாருக்கு சுறா மீன் நடமாட்டம் இருப்பதை எடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த மணிமாறன் என்பவர் மெரினா அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென அவரது காலை சுறா மீன் ஒன்று கடித்ததாகவும் உடனே அவர் சுதாரித்துக் கொண்டு தரை திரும்பியதாகவும் தெரிகிறது
இந்த நிலையில் காலில் காயப்பட்ட அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது . இந்நிலையில் மீனவர் ஒருவர் கூறியபோது மெரினாவில் சுறா மீன் காண்பது அரிது என்றும், ஆனால் மணிமாறன் சொல்வதைப் பார்த்தால் சுறா மீன் நடமாட்டம் இருப்பதாக தெரிகிறது என்றும் இதனை அடுத்து அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்
நொச்சிக்குப்பம் , பட்டினப்பாக்கம் உள்ள பகுதிகளில் எச்சரிக்கை பலகை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.