Publish Date: Mon, 15 Apr 2024 (09:51 IST)
Updated Date: Mon, 15 Apr 2024 (11:15 IST)
கடந்த சில நாட்களாக தங்கம் விலை உச்சத்திற்கு சென்றது என்பதும் குறிப்பாக ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை நெருங்கியது என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் திடீர் என இன்று தங்கம் கிட்டத்தட்ட 500 ரூபாய் வரை குறைந்துள்ளது பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 65 ரூபாய் குறைந்து ரூபாய் 6,790 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 520 குறைந்து ரூபாய் 54,320 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.55,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,260 எனவும் ஒரு சவரன் ரூபாய் 58,080 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 89.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 89,500.00 எனவும் விற்பனையாகி வருகிறது