Publish Date: Tue, 06 Feb 2024 (10:26 IST)
Updated Date: Tue, 06 Feb 2024 (10:28 IST)
தங்கம் விலை கடந்த மூன்று நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்று நான்காவது நாளாகவும் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ரூபாய் 5830.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 160 குறைந்து ரூபாய் 46640.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6300.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 50400.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 76.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 76000.00 எனவும் விற்பனையாகி வருகிறது