Publish Date: Thu, 02 Nov 2023 (11:35 IST)
Updated Date: Thu, 02 Nov 2023 (11:37 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சரிவில் இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் ஒரு சவரனுக்கு ரூ.72 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்து தற்போது பார்ப்போம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 9 ரூபாய் அதிகரித்து ரூபாய் 5695.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 72 அதிகரித்து ரூபாய் 45560.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6165.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 49320.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ரூபாய் 77.70 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 77700.00 எனவும் விற்பனையாகி வருகிறது