Publish Date: Sat, 12 Aug 2023 (11:14 IST)
Updated Date: Sat, 12 Aug 2023 (11:15 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டே வந்த நிலையில் இன்று ஒரே நாளில் ஒரு சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்துள்ளதை அடுத்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் இன்று ஒரு கிராம் தங்கம் விலை 15 ரூபாயும் ஒரு சவரன் தங்கம் விலை 120 ரூபாயும் உயர்ந்துள்ளது.
24 காரட் தங்கம் ஒரு கிராம் 5970.00 என்றும், 8 கிராம் 47760.00 ரூபாய் எனவும் விற்பனையாகி வருகிறது.
சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் 5500.00 என்றும் ஒரு சவரன் தங்கம் 44000.00 என்று விற்பனை ஆகி வருகிறது. அதேபோல் வெள்ளியில் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இன்று சென்னையில் வெள்ளி ஒரு கிலோ ரூ.76200.00 என விற்பனையாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது