Publish Date: Wed, 12 Jul 2023 (10:28 IST)
Updated Date: Wed, 12 Jul 2023 (10:30 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக சரிது கொண்டே வந்த நிலையில் இன்று திடீரென ஒரு கிராம் 18 ரூபாய் மற்றும் ஒரு சவரன் 144 ரூபாய் உயர்ந்துள்ளது பொது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 18 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5500.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 144 உயர்ந்து ரூபாய் 44000.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 5959.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 47672.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை 10 காசுகள் குறைந்து ஒரு கிராம் 77.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 77000.00 எனவும் விற்பனையாகி வருகிறது