Publish Date: Thu, 23 Mar 2023 (09:47 IST)
Updated Date: Thu, 23 Mar 2023 (09:49 IST)
தங்கம் விலை ஒரு சவரனுக்கு 800 ரூபாய் குறைந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்து உள்ளதை அடுத்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று சென்னையில் தங்கம் விலை என்ன என்பது குறித்த நிலவரங்களை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5540.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 560 உயர்ந்து ரூபாய் 44320.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6026.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 42736.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 140 காசுகள் உயர்ந்து ரூபாய் 75.40 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 75400.00 எனவும் விற்பனையாகி வருகிறது