Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடுத்தடுத்து மூன்று விக்கெட்களை வீழ்த்திய ஹர்திக் பாண்ட்யா!

webdunia
புதன், 22 மார்ச் 2023 (15:04 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெல்லும் அணியே தொடரை வெல்லும் என்பதால் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீல் ஸ்மித் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ஆஸி அணி சீராக விளையாடி வந்த நிலையில் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச வந்த போது, டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகிய மூவரையும் தனது அடுத்தடுத்த ஓவர்களில் வீழ்த்தி அசத்தினார்.

தற்போது வரை ஆஸி அணி 3 விக்கெட்களை இழந்து 94 ரன்களை சேர்த்து தொடர்ந்து ஆடி வருகிறது. களத்தில் டேவிட் வார்னரும், லபுஷானும் ஆடி வருகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோலி இன்னும் 30 டெஸ்ட்கள் விளையாடினால்?... ஷோயிப் அக்தர் சொல்லும் ஆருடம்!