Publish Date: Tue, 07 Feb 2023 (10:13 IST)
Updated Date: Tue, 07 Feb 2023 (10:14 IST)
தங்கம் விலை நேற்று ஒரு கிராமுக்கு 30 ரூபாயும் சவரனுக்கு 240 ரூபாயும் இறங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில் இறங்கிய வேகத்தில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்த நிலவரங்களை விலை நிலவரம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 8 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5373.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 64 உயர்ந்து ரூபாய் 42984.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5735.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 45880.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூபாய் 74.00எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 74000.00 எனவும் விற்பனையாகி வருகிறது