Publish Date: Mon, 06 Feb 2023 (14:10 IST)
Updated Date: Mon, 06 Feb 2023 (14:12 IST)
சென்னையில் அனுமதி இல்லாத இடத்தில் சுவரொட்டி ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை மாநகராட்சியின் சாலை மற்றும் தெருப் பெயர்களில் சுவரொட்டிகளை ஒட்டி வருவதால் சாலையின் பெயர் கூட தெரியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் சாலை மற்றும் தெரு பெயர்கள் உள்ள பதாகைகள் மீது சுவரொட்டி ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது
இந்த நிலையில் சென்னை மாநகராட்சியின் சாலை, தெரு பெயர்களில் சுவரொட்டி ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொது இடங்களில் சுவரொட்டி ஒட்டவோ விளம்பர பதாகை வைக்க கூடாது என்றும் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது
இந்த எச்சரிக்கையை மீறி சுவரொட்டி ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.