Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாரத்தின் கடைசி தினத்திலும் பங்குச்சந்தை ஏற்றம்.. முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபம்..!

Siva
வெள்ளி, 31 ஜனவரி 2025 (10:17 IST)
கடந்த மூன்று நாட்களாக பங்குச் சந்தை ஏற்றம் கண்ட நிலையில் இன்று வாரத்தின் கடைசி நாளிலும் பங்குச் சந்தை ஏற்றம் கொண்டிருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பது மட்டுமின்றி பெரும் லாபம் கிடைத்திருப்பதாகவும் தகவல் நிலையாய் உள்ளன.

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் வர்த்தகம் சற்றுமுன் தொடங்கிய நிலையில் 173 புள்ளிகள் உயர்ந்து 76 ஆயிரத்து 924 என்ற புள்ளிகளில்  வர்த்தகம் ஆகி   வருகிறது. அதேபோல் தேசிய பங்கு சந்தை நிஃப்டி 76 புள்ளிகள் உயர்ந்து 23 ஆயிரத்து 329 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.

இன்றைய பங்குச் சந்தையில் டைட்டான், ஐடிசி, டாட்டா ஸ்டீல், ஹீரோ மோட்டார், மாருதி, இன்ஃபோசிஸ், விப்ரோ, சன் பார்மா, ஹிந்துஸ்தான் லீவர், பஜாஜ் ஆட்டோ, டாடா மோட்டார்ஸ், இண்டஸ் இன் வங்கி, ஹெச் சி எல் டெக்னாலஜி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.

அதேபோல், ஆக்சிஸ் வங்கி, பிரிட்டானியா, ஸ்டேட் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, கோடக் வங்கி, ஆசியன் பெயிண்ட், ஐசிஐசிஐ வங்கி, பாரதி ஏர்டெல் பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

இந்த வாரத்தில் திங்கள் கிழமை தவிர, மற்ற அனைத்து நாட்களிலும் பங்குச் சந்தை உயர்ந்துள்ளதால், அடுத்த வாரமும் இதே நிலை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பூமிக்கு திரும்பாத சுனிதா வில்லியம்ஸ்! விண்வெளியில் படைத்த புதிய சாதனை!

புதிய பாம்பன் பாலத்தில் இன்று கப்பல் கடக்கும் சோதனை! - திறப்பு விழா எப்போது?

கடும் எதிர்ப்பு எதிரொலி.. காலை உணவு திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டம் ரத்து..!

விமான விபத்திற்கு, பைடன், ஒபாமா ஆட்சி தான் காரணம்: டொனால்டு டிரம்ப் குற்றச்சாட்டு..!

பஞ்சாப் முதல்வர் வீட்டில் சோதனை.. தேர்தல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments