ஏறிய வேகத்தில் இறங்கும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

Siva
வெள்ளி, 13 டிசம்பர் 2024 (09:49 IST)
பங்குச்சந்தை கடந்த இரண்டு வாரங்களாக ஏற்றத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் முதல் மூன்று நாட்கள் மந்தமான வர்த்தகம் நடந்து கொண்டிருந்த நிலையில் நேற்று திடீரென பங்குச்சந்தை சரிவில் இருந்தது.

இந்த நிலையில் இன்றும் பங்குச்சந்தை ஆரம்பத்திலேயே 600 புள்ளிகள் சரிந்துள்ளது. இதனை அடுத்து ஏறிய வேகத்தில் பங்குச்சந்தை இறங்கி வருவதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இன்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 585 புள்ளிகள் சரிந்து 80 ஆயிரத்து 710 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதே போல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 172 புள்ளிகள் சரிந்து 24 ஆயிரத்து 376 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.

இன்றைய பங்குச்சந்தையில் பாரதி ஏர்டெல், ஹிந்துஸ்தான் லீவர் உள்ளிட்ட ஒரு சில பங்குகள் மட்டுமே உயர்ந்து வருவதாகவும், மற்ற அனைத்து பங்குகளும் சரிந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளன. குறிப்பாக வங்கி பங்குகள் ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.



Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊடுருவல்காரர்களை பாதுகாக்கவே SIR பணியை எதிர்க்கின்றனர். அமித்ஷா குற்றச்சாட்டு

மிஸ் யுனிவர்ஸ் 2025: மெக்சிகோவின் ஃபாத்திமா போஷ் வெற்றி

7 கி.மீ. நீளம், 25 மீ. ஆழம், 80 அறைகள்.. ஹமாஸ் சுரங்கத்தை கண்டுபிடித்த இஸ்ரேல் ராணுவம்..!

சக பெண் ஊழியருடன் கள்ளக்காதல்.. மனைவி, 2 குழந்தைகளை தலையணையால் அமுக்கி கொலை..!

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மைத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு.. தேர்வு தேதி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments