Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாரத்தின் முதல் நாளே அமோகம்.. இந்திய பங்குச்சந்தை மீண்டும் ஏற்றம்..!

Siva
திங்கள், 5 மே 2025 (10:43 IST)
இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
 
கடந்த சில வாரங்களுக்கு முன் சென்செக்ஸ் 76 ஆயிரம் என்று இருந்த நிலையில் தற்போது 81,000 வந்துள்ள நிலையில் முதலீட்டாளர்கள் நல்ல லாபம் பெற்று வருகின்றனர்.
 
இந்த நிலையில் இன்றும் சென்செக்ஸ் வார் 500 புள்ளிகள் வரை உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு மேலும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
 
இன்றைய பங்குச் சந்தையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்ந்து 81,002 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
அதே போல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 173 புள்ளிகள் உயர்ந்து 24 ஆயிரத்து 512 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது.
 
இன்றைய பங்குச்சந்தையில் அப்போலோ ஹாஸ்பிடல், ஆசியன் பெயிண்ட், பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், சிப்லா, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹீரோ மோட்டார்ஸ், ஹிந்துஸ்தான் லீவர், ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி, இன்ஃபோசிஸ் போன்ற பங்குகள் உயர்ந்துள்ளன.
 
அதேபோல் கோடக் மகேந்திரா வங்கி, இண்டஸ் இண்ட் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பங்குகள் குறைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

முன்பெல்லாம் தங்கம், வெள்ளி விலையை தினசரி கேட்போம்.. இப்போது கொலை எண்ணிக்கையை கேட்கிறோ: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments