Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2வது நாளாகவும் பங்குச்சந்தை உயர்வு.. மீண்டும் காளையின் பிடியில் வருமா?

Siva
புதன், 29 ஜனவரி 2025 (10:04 IST)
பங்குச்சந்தை கடந்த திங்கட்கிழமை சரிந்தாலும், செவ்வாய்க்கிழமை ஆன நேற்று ஓரளவு உயர்ந்தது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியபோது, பாசிட்டிவாக தொடங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சற்று முன்பு, மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 272 புள்ளிகள் உயர்ந்து 76,173 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 99 புள்ளிகள் உயர்ந்து 23,055 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.

இன்றைய பங்குச்சந்தையில், விப்ரோ, டெக் மகேந்திரா, டி.சி.எஸ், டாடா ஸ்டீல், ஸ்ரீராம் பைனான்ஸ், இன்போசிஸ், எச்.சி.எல் டெக்னாலஜி, பஜாஜ் பைனான்ஸ், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளது. அதேபோல், பாரதி ஏர்டெல், ஏசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, ஹிந்துஸ்தான் லீவர், பிரிட்டானியா உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

பங்குச்சந்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு மிக மோசமாக சரிந்த நிலையில், தற்போது மீண்டும் பங்குச்சந்தை காளையின் பிடியில் வந்திருப்பதை அடுத்து, இனி வரும் நாட்களிலும் பாசிட்டிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் யாரும் புனிதராக முடியாது.. நடிகை மம்தா குல்கர்னி துறவறம் குறித்து பாபா ராம்தேவ்..!

யமுனை நதியில் நச்சு கலக்கும் பாஜக.. அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சால் சிக்கல்..!

மரணத்துக்கு பிறகு என்ன நடக்கும்? ஆன்லைனில் தகவல் தேடி தற்கொலை செய்த 12ஆம் வகுப்பு மாணவி..!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி எப் 15: 100வது ராக்கெட்டில் சாதனை செய்த இஸ்ரோ..!

பிரயாக்ராஜ் கும்பமேளாவில் ஏற்பட்ட தீடீர் கூட்ட நெரிசல்: 15 பேர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments