வாரத்தின் முதல் நாளான நேற்று, பங்குச்சந்தையின் சென்செக்ஸ் மார்க் 450 புள்ளிகள் சரிந்த நிலையில், இன்று மீண்டும் சரிந்து உள்ளது. இதனால் முதலீட்டாளர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாகவே சரிவில் இருந்து வரும் நிலையில், இன்று சற்றுமுன் பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியதுடன் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 425 புள்ளிகள் சரிந்து, 778 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதே போல், தேசிய பங்குச்சந்தை நிப்டி 15 புள்ளிகள் சரிந்து, 23,539 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இன்றைய பங்குச்சந்தையில் கோடக் மகேந்திரா வங்கி, மாருதி, ஸ்டேட் வங்கி, டாட்டா மோட்டார்ஸ் உள்ளிட்ட ஒரு சில பங்குகள் மட்டுமே உயர்ந்துள்ளன.
ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், டெக்னாலஜி, எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹிந்துஸ்தான் லீவர், இன்ஃபோசிஸ், டிசிஎஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களில் பங்குகள் சரிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வாரம் முழுவதும் பங்குச்சந்தை சோதனையான காலமாக இருக்கும் என்றும், புதிதாக முதலீடு செய்ய உள்ளவர்கள் தகுந்த ஆலோசனை பெற்று மட்டுமே முதலீடு செய்ய வேண்டும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.