கடந்த சில நாட்களாக இந்திய பங்குச்சந்தைகள் சரிந்தாலும் மதியத்துக்கு மேல் உயர்ந்து பங்குச் சந்தை வர்த்தகம் முடிவடையும்போது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை கொடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் இன்று மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் சிறிதளவு சரிந்துள்ளது. சற்றுமுன் வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 80 புள்ளிகள் குறைந்து 61 ஆயிரத்து 900 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிட தக்கது
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 35 புள்ளிகள் குறைந்து 18 ஆயிரத்து 372 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் குறைவான அளவில் சரிந்தாலும் மதியத்திற்கு மேல் இன்றும் பங்குச்சந்தை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது