பங்குச் சந்தை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் முதல் நால் முதலே சென்செக்ஸ் சரிந்து இருப்பதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்றும் பங்குச் சந்தை சரிந்துள்ளது. இன்று காலை 9 மணிக்கு பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 600 புள்ளிகள் சரிந்து 60210 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. இன்னும் சில மணி நேரத்தில் 60 ஆயிரத்துக்கும் கீழ் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி சுமார் 190 புள்ளிகள் சரிந்து 18 ஆயிரத்திற்கும் குறைவாக வர்த்தகமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் ஒருசில நாட்களுக்கு பங்குச்சந்தை சரிய வாய்ப்பு இருப்பதாகவும், இதனை பயன்படுத்தி புதிய முதலீடு செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.