பங்குச்சந்தை சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று பங்குச்சந்தை சரிந்தது என்பதை பார்த்தோம் இந்த நிலையில் இன்று 2-வது நாளாக மீண்டும் பங்குச் சந்தை சரிந்துள்ளதால் முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இன்று காலை 9 மணிக்கு பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சற்று முன் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 150 புள்ளிகள் சரிந்து 60 ஆயிரத்து 925 என்ற புள்ளிகளில் வழக்கமாகி வருகிறது. மீண்டும் 61 ஆயிரத்துக்குள் சென்செக்ஸ் வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 50 புள்ளிகள் வரை சரிந்து 18 ஆயிரத்து 150 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது. பங்குச்சந்தை குறுகிய காலத்தில் சரிந்தாலும் நீண்ட காலத்தில் இன்னும் அதிகமாக உயர வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்