Publish Date: Mon, 07 Aug 2023 (10:35 IST)
Updated Date: Mon, 07 Aug 2023 (10:37 IST)
பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் கடந்த வாரம் மிகப்பெரிய அளவில் சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் இன்று வாரத்தின் முதல் நாளிலேயே பங்குச்சந்தை உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது
இன்று மும்பை பங்குச்சந்தை 200 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து 65 ஆயிரத்து 925 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது,.
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 58 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்து 19575 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது.
வாரத்தின் முதல் நாளிலேயே பங்குச்சந்தை ஏற்றம் கண்டிருப்பது முதலில் முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்பதும் முதலீட்டாளர்கள் நம்பிக்கை உடன் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.