பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்தது என்பதும் குறிப்பாக அதானி குழும விவகாரம் மற்றும் அமெரிக்காவில் வங்கிகள் திவால் ஆகி வருவது ஆகியவை காரணமாக இந்திய பங்குச்சந்தை ஆட்டம் கண்டது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பின்னர் இன்று பங்குச்சந்தை மீண்டும் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. சற்று முன் பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்து 58,200 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 100 புள்ளிகள் உயர்ந்து 17,140 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பங்கு சந்தை தொடர்ந்து ஏற்றம் காணுமா அல்லது மீண்டும் சரியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்