Publish Date: Tue, 17 Oct 2023 (10:59 IST)
Updated Date: Tue, 17 Oct 2023 (11:01 IST)
பங்குச்சந்தை நேற்று காலையில் குறைந்தாலும் மதியத்திற்கு மேல் பங்குச்சந்தை ஓரளவிற்கு உயர்ந்த நிலையில் இன்று காலை பங்குச்சந்தை தொடக்கமே 350 புள்ளிகள் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 350 புள்ளிகள் உயர்ந்து 66512 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 105 புள்ளிகள் உயர்ந்து 19,837 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் நீண்ட கால அடிப்படையில் பங்குச்சந்தை உயரும் என்றும் இஸ்ரேல் போர் பங்குச்சந்தையை பெரிய அளவில் பாதிக்காது என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.