Publish Date: Thu, 18 May 2023 (09:32 IST)
Updated Date: Thu, 18 May 2023 (09:34 IST)
இந்திய பங்குச்சந்தை நேற்று மற்றும் நேற்று முன்தினம் சரிவில் இருந்த நிலையில் இன்று மீண்டும் ஏற்றத்தில் இருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
சற்றுமுன் மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் வர்த்தகம் தொடங்கிய நிலையில் 300 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்து 61,900 என்ற புள்ளிகளில் தற்போது வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி சுமார் 85 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்து 18,265 என்ற புள்ளிகளில் அற்புதமாகி வருகிறது,. பங்குச்சந்தை இரண்டு நாள் சரிந்தாலும் இரண்டு நாள் சரிவை ஒரே நாளில் ஏறிவிட்டதை அடுத்து முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் வரும் நாட்களிலும் பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் முதலீட்டாளர்கள் கவனமாக முதலீடு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது