Publish Date: Tue, 09 May 2023 (10:04 IST)
Updated Date: Tue, 09 May 2023 (10:05 IST)
பங்குச்சந்தை நேற்று வாரத்தின் முதல் நாளில் 600 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த நிலையில் முதலீட்டாளர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருந்தனர். இந்த நிலையில் இன்றும் சுமார் 200 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களை குஷியாக்கி உள்ளது.
இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியவுடன் மும்பை பங்குச்சந்தையின் 182 புள்ளிகள் உயர்ந்து 61945 என்ற புள்ளிகளில் விற்பனையாக்கி வருகிறது. அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 60 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 18,325 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து இரண்டு நாட்களாக பங்குச்சந்தை ஏற்றத்தில் இருப்பது முதலீட்டாளர்களுக்கு பாசிட்டிவ் எண்ணங்களை ஏற்படுத்தி உள்ளது. மேலும் புதிய முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குச்சந்தையில் நுழைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.