பங்குச்சந்தை கடந்த இரண்டு நாட்களாக ஏற்றத்தில் இருந்த நிலையில் இன்று மீண்டும் சரிந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இன்று காலை பங்கு சந்தை தொடங்கும்போதே சரிவில் தொடங்கியது என்பதும் சற்றுமுன் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 165 புள்ளிகள் சரிந்து 61,180 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 55 புள்ளிகள் சரிந்து 18,092 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. பங்குச்சந்தை இன்று தொடர்ந்து சரிவில் தான் இருக்கும் என்றும் இனிவரும் நாட்களில் தான் பங்குச்சந்தை உயர வாய்ப்பு இருப்பதாகவும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும் பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 61,000 மேல் வர்த்தகமாகி வருவது பாசிட்டிவாக பார்க்கப்படுகிறது.