Publish Date: Thu, 27 Apr 2023 (10:00 IST)
Updated Date: Thu, 27 Apr 2023 (10:02 IST)
பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் குறிப்பாக இந்த வாரம் திங்கள் செவ்வாய் ஏற்றத்திலும், புதன்கிழமை சரிவிலும் இருந்தது என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் இன்று பங்குச்சந்தை மீண்டும் உயர்ந்துள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்றைய பங்குச்சந்தை தொடங்கி தற்போது வர்த்தகம் நடந்து வரும் நிலையில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 100 புள்ளிகள் உயர்ந்து 60 ஆயிரத்து 395 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
தே போல் தேசிய பங்குச்சந்தையான லிப்ட் 25 புள்ளிகள் உயர்ந்து 17,838 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. பங்குச்சந்தை படிப்படியாக உயர்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் மீண்டும் 62,000 சென்செக்ஸ் வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் பங்குச்சந்தையின் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.