Publish Date: Fri, 17 Mar 2023 (09:31 IST)
Updated Date: Fri, 17 Mar 2023 (09:38 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக சரிவுடன் இருந்ததால் முதலீட்டாளர்கள் அச்சத்துடன் இருந்த நிலையில் இன்று ஆரம்பமே 400 புள்ளிகளுக்கும் அதிகமாக சென்செக்ஸ் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.
அதானி விவகாரம், அமெரிக்க வங்கி திவால் ஆனது உள்பட ஒரு சில காரணங்களால் இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக சரிந்தது என்பதும் இதனால் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்தனர் என்பதையும் பார்த்தோம்
இந்த நிலையில் சற்று முன் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் வர்த்தகம் தொடங்கிய நிலையில் 458 புள்ளிகள்உயர்ந்து 58,080 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை 130 புள்ளிகள் உயர்ந்து 17,117 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது.
மீண்டும் 58 ஆயிரத்தை சென்செக்ஸ் கடந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே ரீதியில் சென்றால் பங்குச்சந்தை மீண்டும் 62,000ஐ தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.