Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்செக்ஸ் 949 புள்ளிகள் சரிந்து முடிந்த வர்த்தகம்!!

சென்செக்ஸ் 949 புள்ளிகள் சரிந்து முடிந்த வர்த்தகம்!!
, திங்கள், 6 டிசம்பர் 2021 (17:51 IST)
பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக சரிவில் இருக்கும் நிலையில் அதில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

 
கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை பங்குச் சந்தை உச்சத்தில் இருந்தது என்பதும் இதனால் முதலீட்டாளர்கள் பெரும் லாபம் பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை சரிந்து வருகிறது. உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 949 புள்ளிகள் சரிந்து 56,747 புள்ளிகளாக வீழ்ச்சியடைந்துள்ளது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களின் பங்குகளுடன் விலை குறைந்து வர்த்தகமாகியது. 
 
இண்டஸ் இண்ட் வங்கி, பஜாஜ் ஃபின்செர்வ், ஏர்டெல், எச்சிஎல் டெக், டிசிஎஸ், டெக் மகேந்திரா, இன்போசிஸ், மாருதி சுசூகி, என்.டி.பி.சி., சன் பார்மா, டைட்டன் உள்ளிட்ட பங்குகள் விலை குறைந்தன. 
 
இதே போல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 248 புள்ளிகள் சரிந்து 16,912 புள்ளிகளாக உள்ளது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனர்களில் யுபிஎல் பங்கைத் தவிர 49 நிறுவனப் பங்குகளும் விலை குறைந்து முடிந்துள்ளன. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பிப்ரவரியில் நடத்த திட்டமா?