Publish Date: Sat, 05 Nov 2022 (08:31 IST)
Updated Date: Sat, 05 Nov 2022 (11:17 IST)
கடந்த சில மாதங்களாக சென்னை உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் இன்றும் நாடு முழுவதும் பெட்ரோல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனை அடுத்து இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.64 எனவும் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் கடந்த ஆறு மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் இருந்து கோரிக்கை விடப்பட்டு வருகிறது.
பொதுமக்களின் இந்த கோரிக்கையை மத்திய மாநில அரசு நிறைவேற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Edited By: Sugapriya Prakash